ETV Bharat / state

மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியையாக அவதாரம் எடுத்த மாணவி!

author img

By

Published : Oct 4, 2020, 1:08 PM IST

Updated : Oct 6, 2020, 12:21 PM IST

சோலையூர்(கேரளா): மலைக்கிராமத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில், தனது வீட்டையே வகுப்பறையாக மாற்றி, அப்பகுதி குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறார், எட்டாம் வகுப்பு மாணவி. சிறுவயதிலேயே சக ஊர் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியையாக உருவெடுத்திருக்கும் மாணவி அனாமிகா குறித்து விளக்குகிறது, இந்த செய்தித்தொகுப்பு.

பழங்குடியின மாணவி
பழங்குடியின மாணவி

தமிழ்நாடு - கேரள எல்லையில், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது, சோலையூர் என்னும் பழங்குடியின மலைக்கிராமம். இங்கு வசித்து வரும் சுதீர் - சசி தம்பதிக்கு அனாமிகா, மெளலிகா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் அனாமிகா திருவனந்தபுரத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படாததால் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.

கரோனா பீதியால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறத் தொடங்கிய நேரம், மலைக்கிராமம் என்பதால் இப்பகுதியினருக்கு மின்சாரம் மற்றும் இணையசேவை கிடைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. இதே நிலை நீடித்தால் அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என நினைத்த மாணவி அனாமிகா, ஆன்லைன் மூலம் பாடம் கற்க முடியாத தங்கள் பகுதி கிராம மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கத் தொடங்கினார். மகளின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சுதீர், தான் குடியிருந்த வீட்டின் அறையை, வகுப்பறையாக உருவாக்கி கொடுத்துள்ளார்.

வகுப்பறையாக மாறிய வீடு
வகுப்பறையாக மாறிய வீடு

மாணவி அனாமிகாவிற்கு அவர் படிக்கும் பள்ளியில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய நான்கு மொழிகள் கற்று கொடுக்கப்படுவதால், இங்கு உள்ள குழந்தைகளுக்கு தான் கற்றறிந்த ஜெர்மன், மலையாளம்,தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து வருகிறார்.

பழங்குடியின மாணவி
பழங்குடியின மாணவி

காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அனைத்து குழந்தைகளுக்கும் பாடம் நடத்தி வரும் அனாமிகா, மலையாளத்தில் கதைகள் மொழியாக்கம் குறித்தும் கற்றுக்கொடுத்து வருகிறார்.

இது குறித்து மாணவி அனாமிகா கூறுகையில், 'தான் திருவனந்தபுரத்தில் படித்து வந்தாலும் அவ்வப்போது தன்னுடைய வீடான சோலையூருக்கு வந்து செல்வது வழக்கம். கரோனா பிரச்னை காரணமாக, தற்போது இங்கு வந்த சூழலில் பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என அரசுப் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.

இதனையடுத்து அனைவரும் ஆன்லைனில் கல்வி கற்று வருகின்றனர். ஆனால், தங்களுடைய பகுதியில் இணையதள வசதிகள் இல்லாததால் ஸ்மார்ட்போன் மூலம் கல்வி கற்க முடியவில்லை. தனக்குத் தெரிந்த ஜெர்மனி மொழிகளை இங்குள்ள குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என எண்ணி தந்தையின் ஒத்துழைப்போடு இந்த சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகிறேன்.

தனக்குத் தெரிந்த அடிப்படை மொழியறிவை இங்கு உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். தங்களுடைய பகுதிக்கு இணையதள வசதிகள் செய்து கொடுத்தால் கரோனா காலம் முடியும் வரை, அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதுதவிர பள்ளி பாடங்களுக்குத் தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு கோயம்புத்தூர் அல்லது பாலக்காடு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அட்டப்பாடி பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கான உபகரணங்கள் கிடைக்கும் வகையில், அரசு ஏற்பாடு செய்தால் இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவியாக இருக்கும்' எனத் தெரிவித்தார்.

மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியையாக அவதாரம் எடுத்த மாணவி

இது குறித்து மாணவி அனாமிகாவின் தந்தை சுதீர் கூறுகையில், 'தான் கூலி வேலை செய்து வருகிறேன். தன்னுடைய குழந்தை திருவனந்தபுரத்தில் படித்தாலும் கரோனா காலத்தில், இங்கு உள்ள சூழலில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. தங்களுடைய பகுதிக்கு உடனடியாக இணையதள வசதி செய்து கொடுத்தால், தன்னுடைய குழந்தைகள் மட்டுமல்லாமல் இங்குள்ள மலைக்கிராமங்களைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளும் இணையதளம் மூலம் கல்வி கற்க வசதியாக இருக்கும்.

தங்களுக்கு அரசு தரப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் நிறைய உதவிகள் செய்து வந்தாலும் பாடங்களைப் படிக்க மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் 'கரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாததால் ஊருக்கு வந்த தனது மூத்த மகள் அனாமிகா இணையதளம் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை என எண்ணி வருந்தியதுடன் நிற்காமல், இங்கு உள்ள குழந்தைகளுக்குத் தனக்கு தெரிந்த மொழிகளை கற்றுத் தர வேண்டும் என விரும்பினார்.

ஆகவே, குடியிருந்த ஓலைக் குடிசையை வகுப்பறையாக மாற்றி தந்துள்ளேன். இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' எனப்பூரித்தார்.

இதையும் படிங்க: ஊரடங்கால் நிலைகுலைந்த பழங்குடி கிராமங்கள்: அத்தியாவசிய பொருள்களுக்கு அவதி!

Last Updated : Oct 6, 2020, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.