கோயம்புத்தூர்: வால்பாறை அருகே உள்ளது சிறுகுன்றா தேயிலைத் தோட்டம். இதன் எல்டி பிரிவில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இன்று பகல் நேரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று தேயிலை தோட்டப் பகுதியிலிருந்து வால்பாறை சின்கோனா பிரதான சாலையை கடக்க முடியாமல் சிறுகுன்றா எல்டி தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
காட்டு யானை தொழிலாளர் குடியிருப்பில் வந்ததை அறிந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வீட்டிற்குள் ஓடி ஒழிந்து கொண்டு நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிர்வாகம் தேயிலை தோட்ட காவலர்களை அனுப்பி தொழிலாளர்களும் இணைந்து ஒற்றை காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர்.
இதனால் அங்கிருந்து அகன்ற ஒற்றை காட்டு யானை பிரதான சாலையை கடந்து அருகிலுள்ள தேயிலை தோட்ட பகுதிக்குள் சென்றது. அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளதால் மீண்டும் இரவு நேரத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்று அச்சத்திலும் பீதியிலும் மக்கள் உள்ளனர்.
இதையும் படிங்க:அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகாயம்