கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வட்டாரம் மற்றும் டவுன் பகுதிகளில் கடந்த சில நாட்களாக
இரண்டு திருடர்கள் இரவு நேரங்களில் நோட்டம் விட்டு திருடிச் செல்கின்றனர். முதலில் சாதாரண உடையில் மர்ம நபர் வீடுகளை நோட்டம் விடுகிறார். அதன் பிறகு இரவு நேரங்களில் பெண் போல் சுடிதார், வெள்ளை ஆடை அணிந்தபடி திருடுகின்றனர்.
முதலில் உயரமான தாடி வைத்த மர்ம நபர் இன்னொரு நபருடன் செல்போனில் பேசியபடி வருகிறார். இதே நபர், வடபுதூர் பகுதியில் சட்டை மற்றும் டிரவசருடன் திருட வந்துள்ளார். இதனால், கிணத்துக்கடவு வட்டார பொதுமக்கள், இரவு நேரங்களில் மிகவும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என கிணத்துக்கடவு காவல் துறையினர் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குழாய் வழியாக 31 கிலோ ஹெராயின் கடத்தல்.. ராணுவ வீரர் உட்பட இருவர் கைது!