ETV Bharat / state

எம்ஜிஆர் படம்போல் விவசாய கண்காட்சிக்கு கூட்டம் வருகிறது; திமுக அமைச்சரின் பேச்சு! - International Agricultural Exhibition

கோவை கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2022 சர்வதேச விவசாயக் கண்காட்சி நடைபெறுகிறது. அதனை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

கோவை கொடிசியா வளாகத்தில்  விவசாய  கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்

author img

By

Published : Jul 16, 2022, 4:24 PM IST

கோவை கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2022 சர்வதேச விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் சார்ந்த நிறுவனங்கள் விவசாய மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நவீன மற்றும் தொழில்நுட்ப இயந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். சுமார் 570 அரங்குகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. 4 நாட்கள் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இதனைக்காண தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வருகை புரிவர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 'கடந்த 20 ஆண்டுகளாக இந்தக்கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இதனால் பயன்பெற்றுள்ளனர். இதில் 490 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கோவையைப் பொறுத்தவரை தொழில் துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப்போல விவசாயத்திற்கும் அதனை சார்ந்த தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல வேளாணுக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது' எனப் பேசினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், ’வேளாண்துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வோம் எனக்கூறி அதனை தாக்கல் செய்தவர் முதலமைச்சர். இந்த ஆட்சியில் வேளாண்மை மதிக்கப்படுகிறது. அது மட்டும் அல்ல எம்ஜிஆர் படத்தைக் காண செல்லும்பொழுது டிக்கெட் வாங்குவதற்கு சட்டை கிழிவதைப்போல, இந்த கண்காட்சியைக் காண விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வருகை புரிகின்றனர்.

கோவை கொடிசியா வளாகத்தில்  விவசாய  கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்
கோவை கொடிசியா வளாகத்தில் விவசாயக் கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்; மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

வைரஸ் தொற்றுக்காலத்தில் தொழிற்சாலைகள் மூடி இருந்தது. ஆனால் விவசாயிகள் உழைத்துக்கொண்டே தான் இருந்தார்கள். விவசாயத்திற்கு வேலை ஆட்கள் குறைந்துவிட்டார்கள். தற்பொழுது தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பக்கருவிகள் அதிகரித்துள்ளன. இந்த கண்காட்சியை இரண்டு முறை நடத்தினால் விவசாயிகள் நன்மை பெறுவர். 100 நாள் வேலைத்திட்டம் வந்தவுடன் விவசாயத்திற்கு வேலை ஆட்கள் குறைந்துவிட்டனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2022 சர்வதேச விவசாய கண்காட்சி நடைபெறுகிறது
கோவை கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2022; சர்வதேச விவசாய கண்காட்சி நடைபெறுகிறது.

பேண்ட் சர்ட் போட்டவர்களும் விவசாயம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த வேளாண் மறுமலர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். ஆறு மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கிய சாதனை, அமைச்சர் செந்தில் பாலாஜியையே சேரும். நான் ஒரிஜினல் விவசாயி. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள்' எனத் தெரிவித்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 'இந்த கண்காட்சியைத் தொடங்கி வைப்பதில் ஒரு விவசாயியாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயி ஆகிய எங்களைப் போன்றவர்களுக்கு இது போன்ற புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்துகொள்ள இக்கண்காட்சி உதவியாக இருக்கும். தொழிலதிபர்கள் இன்றைய தினம் வேட்டியை கட்டிக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. பாம்பு கடித்திருப்பவர்களுக்கு மருத்துவ உதவி போன்றவற்றிற்கு இழப்பீடு அரசாங்கத்தால் கொடுக்கப்படும். மோட்டார்களை வீட்டிலிருந்து இயக்குவதற்கான தொழில் நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு 10ஆயிரம் விவசாயிகளுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு எப்பொழுதும் எல்லாமே போராட்டம் தான். தென்னை விவசாயிகளுக்கு வண்டு கடி மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த மனித வளத்துறை மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சிப்பணிகளை ஆரம்பித்துள்ளோம். பூச்சித்தாக்குதல் ஆரம்பித்த உடனேயே மருந்துகளை தெளிக்க ஆலோசனை கூறியிருக்கிறோம். இப்பொழுது 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை கொடிசியா வளாகத்தில் விவசாயக் கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்; மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துள்ளது. அதனைக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒரு லட்சம் விவசாயிகள் முன்வந்துள்ளனர். கோவையைப் போன்ற மாவட்ட அளவில் நடத்தப்படுகின்ற பணியை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முன்னெடுத்துள்ளனர். இந்த ஆண்டு 50,000 மின் இணைப்புகள் கொடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளேன். ஆறு மாதத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு என்பதை சிலர் முடியாது என்றனர், அதனை முடித்துக் காட்டியவர் முதலமைச்சர்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 42-ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது மேட்டூர் அணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.