ETV Bharat / state

கோவையில் அனுமதியின்றி கள் இறக்கியதாக 83 வழக்குகள் பதிவு!

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகியப் பகுதிகளில் அனுமதியின்றி கள் இறக்கியதாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவையில் அனுமதியின்றி கள் இறக்கியதாக 83 வழக்குகள் பதிவு

author img

By

Published : May 16, 2023, 11:00 AM IST

கோயம்புத்தூர்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செட்டியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் இதுவரை, சிகிச்சை பலன் இன்றி ஒரு பெண் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயத்துடன் மெத்தனால் கலந்திருந்தது உயிரிழப்புக்கு காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும், விற்பதையும் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில், சிறுமுகை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் பொள்ளாச்சி என தென்னை மரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்களை கைது செய்ய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சிறுமுகை, மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் அனுமதி இன்றி கள் இறக்கியதாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், சுமார் 100 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை அங்கேயே அழிக்கப்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா என காவல் துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் மற்றும் காவல் துறை தலைவர் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள் இறக்குவதைத் தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காவல் துறையினர் நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையில், ஆயிரத்து 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆயிரத்து 558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினரின் பத்திரிகை குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நேற்று (மே 15) பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் பலி எதிரொலி - தீவிர ரோந்து பணிகளில் இறங்கிய காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.