கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து நள்ளிரவில் சிறுவர்கள் ஆறு பேர் தப்பியோடினர். இது குறித்து, கூர்நோக்கு இல்ல தலைமை அலுவலருக்கு இரவு நேரத்தில் காவல் பணி செய்த காவலர்கள் தகவல் அளித்துள்ளார்.
தொடர்ந்து சிறுவர்களின் அடையாளங்கள் அனைத்து சோதனை சாவடிகளில் ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், தப்பியோடிய சிறுவர்கள் ஆறு பேரும் அதிகாலை 4 மணிக்கு உடுமலைபேட்டை அருகே பிடிபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்பை அதிகரிக்க உயர் அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை; கவர்ச்சிகர அறிவிப்புகளா? வறுமை ஒழிப்புத் திட்டங்களா?