கோயம்புத்தூர்: 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அதில், இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும், இந்த போர் வங்கதேசம் என்ற தனிநாடு உருவாக காரணமானது. இந்தப் போரின் 50ஆவது ஆண்டு பொன் விழா 2020 டிசம்பர் 16ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி நான்கு வெற்றி ஜோதிகளை ஏற்றி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அரங்கில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படை, கடற்படை, தரைப்படை என முப்படை வீரர்களும் கலந்துகொண்டு வெற்றி ஜோதியை ஏற்றி வைத்தனர்.
பின்னர், அப்போரில் பங்குபெற்ற சுமார் 150 ராணுவ வீரர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஈராக் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய போப் ஆண்டவர்