ETV Bharat / state

முதுமலை வரும் குடியரசுத் தலைவர் முர்மு: 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

author img

By

Published : Aug 5, 2023, 10:35 AM IST

Updated : Aug 5, 2023, 10:44 AM IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை முதுமலைக்கு வரவுள்ள நிலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 layer security arrangement for today president Droupadi Murmu
முதுமலை வரும் குடியரசுத் தலைவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

கோயம்புத்தூர்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். இன்று காலை சுமார் 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் திரௌபதி முர்மு மைசூரு சென்று, அங்கிருந்து தனி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.30 மணிக்கு மசினகுடி வருகிறார். பின்னர், அங்கிருந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழமையான யானைகள் முகாமிற்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.

அங்கு உள்ள வளர்ப்பு யானைகளையும், யானைகளுக்கு உணவளிப்பதையும், ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த ரகு மற்றும் பொம்மி யானைகளையும், அதன் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் சந்திக்கிறார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளுக்கு காட்டு யானைகளை விரட்டச் சென்று களம் கண்ட பாகன்களிடம் உரையாடுகிறார். தெப்பக்காடு மற்றும் டாப்சிலிப் யானை முகாம்களில் பணியாற்றும் யானை பாகன்களை சந்திக்கும் அவர் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து மசினகுடிக்கு வருகிறார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூரு சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.

இதையும் படிங்க: Srirangam Temple Collapse: ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விபத்து!

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மசினகுடி மற்றும் முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில், நீலகிரி மாவட்ட எஸ்.பி பிரபாகர் உள்ளிட்ட 4 எஸ்பிகள், 18 டிஎஸ்பிக்கள் (DSP), 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,100 போலிசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 100 நக்சல் தடுப்புப்பிரிவினர் வன பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே குடியரசுத் தலைவர் வருகையையொட்டி இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லட்டி மலை பாதை மூடப்படுகிறது. அதேபோல் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையும் மூடப்படுவதால் மாற்றுப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்துமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா அதிரடி!

Last Updated : Aug 5, 2023, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.