கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் அருகேயுள்ள வேளாங்கண்ணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிகாஸ். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 24ஆம் தேதி பிரசவத்திற்காக மனைவியை அழைத்துக் கொண்டு, இவர் தனது சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சென்றுள்ளார். நேற்று (அக.27) வேளாங்கண்ணி நகரில் வசிக்கும் நிகாஸ் உறவினர்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே கோயம்புத்தூர் திரும்பிய நிகாஸ் தனது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 43 பவுன் தங்க நகை, லேப்டாப் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நிகாஸ் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விலையுயர்ந்த சைக்கிள்களை திருடிய பள்ளி மாணவன் - எச்சரித்த காவல்துறை!