கோவை: பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் இவர் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கடந்த 23ஆம் தேதி இரவு வீட்டின் வெளியே நிறுத்தியுள்ள காரின் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது இரு சக்கர வாகனங்கள் வந்த நபர்கள் காரை பயங்கர ஆயுதங்களால் உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடினர்.
அதே பகுதியில் இந்து முன்னனியை சேர்ந்த சிவா மற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளுக்கு சென்ற அந்த கும்பல் சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த ஆட்டோக்கள் மற்றும் கார் மீது பலத்தை ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுமார் 250 கண்கானிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டதில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த முகமது ரபீக், ரமீஸ்ராஜா, மற்றும் மாலிக் (எ) சாதிக் பாஷா என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்