ETV Bharat / state

263 அணிகள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி தொடக்கம்! - கோவையில் தொடங்கிய கிளஸ்டர் 6 கூடைப்பந்து போட்டி

கோவை: 263 அணிகள் பங்கேற்ற சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான 'க்ளஸ்டர் 6' கூடைப்பந்து போட்டி சுகுணா பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது.

basket ball
author img

By

Published : Oct 10, 2019, 7:58 PM IST

கோவை காளப்பட்டியில் உள்ள நேரு நகரில் 2019-20ஆம் ஆண்டின் சிபிஎஸ்சி மாணவ மாணவிகளுக்கான 'கிளஸ்டர் 6' என்ற கூடைப்பந்து போட்டி சுகுணா பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது. வருகின்ற 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான கூடைப்பந்து போட்டி முதன் முறையாக கோவையில் தொடங்கியுள்ளது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 128 பள்ளிகளிலிருந்து 263 அணிகள் கொண்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

263 அணிகள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி

இந்நிகழ்ச்சியில் சுகுணா கல்வி குழுமத்தின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், முதல்முறையாக இதுபோன்ற போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் சுஜித் குமார் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: பரமக்குடியில் கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி!

Intro:263 மாணவ மாணவிகள் கலந்துகொண்ட கூடைப்பந்து போட்டி.Body:சி.பி.எஸ்.சி க்ளஸ்டர் 6 என்ற பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி
கோவை சுகுணா பள்ளியில் கோலாகலமாக துவங்கியது.

கோவை காளப்பட்டியியில் உள்ள நேரு நகரில் 2019- 2020 ஆம் கல்வி ஆண்டின் சிபிஎஸ்சி மாணவ மாணவிகளுக்கான கிளஸ்டர் 6 என்ற கூடைப்பந்து போட்டி சுகுணா பள்ளியில் இன்று கோலாகலமாக துவங்கியது. 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த ஆண்டுக்கான கூடைப்பந்து போட்டி முதன் முறையாக கோவையில் துவங்கியுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 128 பள்ளிகளிலிருந்து 263 அணிகள் கொண்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இத்நிகழ்ச்சியில் சுகுணா கல்வி குழுமத்தின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், முதல்முறையாக இதுபோன்ற போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் சுஜித் குமார் தெரிவித்துக் கொண்டார்.

பேட்டி 1 : சுஜித் குமார்- காவல்துறை கண்காணிப்பாளர்,கோவை
லட்சுமி நாராயணசாமி - தலைவர், சுகுணா கல்வி குழுமம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.