கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம் சின்னவதம்பச்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மூத்த மகள் ரேவதி (25). இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இளையமகள் கீதா (23) கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 மாங்களாக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
தற்போது ஊரடங்கு காரணமாக கீதா பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை இவர் வீட்டில் மண்ணெண்ணைய் ஊற்றி உடம்பில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து நெகமம் காவல் துறையினருக்கு தகவல தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கீதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நெகமம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதற்காக மாநில சுகாதார ஹெல்ப்லைன் 104, சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தேனி அருகே வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது