ETV Bharat / state

‘அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பலியாகியுள்ளன’ - சீமான் - அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பலி

கோவை: அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பரிதாபமாக பலியாகியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman
seeman
author img

By

Published : Dec 5, 2019, 3:51 PM IST

மேட்டுப்பாளையம் நடூரில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடைபெற்ற இடத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பலியாகியுள்ளன. வெறும் கற்களை வைத்து சிமெண்ட் வைக்காமல் கட்டியுள்ளனர். உரிமையாளரின் வீட்டுக் கழிவுநீர் இங்கே சுவர் அருகே விடப்பட்டுள்ளது. இதை நான் தீண்டாமை சுவராகத்தான் பார்க்கிறேன்.

குடியிருந்த இடத்திலேயே வீடு கட்டித் தந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தவறு. இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே இது குறித்து புகார்களை தெரிவித்தும் அலுவலர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும். அரசின் இழப்பீடு போதுமானதா? மனித உயிருக்கு பணம் இழப்பீடு சரிவருமா?

போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். இறந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்து எரித்திருக்க வேண்டும். ஆனால் அரசு அவசர அவசரமாக அவர்களது உடலை எரித்துள்ளது" என்று கூறினார்.

Intro:பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிர் பலியாகியுள்ளது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.Body:

மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகள் இடிந்த இடத்தில் சீமான் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிர் பலியாகியுள்ளது. வெறும் கற்களை வைத்து சிமெண்ட் வைக்காமல் கட்டியுள்ளனர். உரிமையாளரின் வீட்டு கழீவு நீர் இங்கே சுவர் அருகே விடப்பட்டுள்ளது. இதை நான் தீண்டாமை சுவராக தான் நான் பார்க்கிறேன். மக்கள் சுவற்றை பற்றி சொல்லபோனால் நாயை விட்டு தூரத்தியுள்ளனர்.

குடியிருந்த இடத்திலேயே வீடு கட்டி தந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். போராடியவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு. இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தோல் மேல் கைவைத்து நம்பிக்கையாக செயல்பட வேண்டும்.
மனித உயிர்களை விட மதில் சுவர் பெரியதா. இந்த மக்களின் முகத்தை பார்க்கக்கூடாது என சுவரை கட்டியவர்கள் உறுதியாக கட்டிருக்கனும்.

ஏற்கனவே இது குறித்து புகார்களை தெரிவித்தும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. ஏற்றதாழ்வு ஒழிக்கப்பட வேண்டும். அரசின் இழப்பீடு போதுமானதா ? மனித உயிருக்கு பணம் இழப்பீடு சரிவருமா ?

போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இறந்தவர்கள் உடல்களை முறையாக அடக்கம் செய்து எரித்திருக்க வேண்டும். ஆனால் அரசு அவசர அவசரமாக அவர்களது உடலை எரித்துள்ளது என கூறினார்..Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.