கோவை பந்தய சாலை பகுதியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ரகுநாத், தற்போது திமுக உறுப்பினராகவும் உள்ளார்.
திமுக.,வை சேர்ந்த இவர் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ரூ.1,500 கோடி வரை ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்திருந்தார்.
இதனிடையே சென்னை, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் என அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்கள் மற்றும் லாக்கர் சாவி பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டன.
அண்மையில், சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புக்குழு, எஸ்.பி.வேலுமணி கணக்கு வைத்திருக்கும் வங்கியில், அவரின் லாக்கரைத் திறந்து சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ளாட்சி துறையில் நடந்த ஊழல் தொடர்பாக 150 பக்கம் கொண்ட ஆவணங்களை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ரகுநாத் இன்று (சனிக்கிழமை) சமர்ப்பித்தார்
இது குறித்து அவர் கூறுகையில், "இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மொட்டையடிக்க கட்டணமில்லை, வள்ளலார் சர்வதேச மையம்; அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் 112 புதிய அறிவிப்பு