கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் அருகே உள்ள வனப் பகுதியையொட்டி ஆறுச்சாமி என்பவரது விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்குள் ராஜநாகம் புகுந்ததாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற பாம்பு பிடிக்கும் நபரான சந்தோஷ் தலைமையிலான குழுவினர், விவசாய நிலத்திலிருந்த சுமார் 15 அடி நீளமுள்ள பெண் ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர்.
இதனையடுத்து பாம்பின் உடல் நலத்தை பரிசோதனை செய்த வனத்துறையினர், பின்னர் அதனை வாகனத்தில் கொண்டு சென்று, சிறுவாணி அடர் வனப்பகுதியில் விட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ”பிடிபட்ட ராஜநாகம் ஏற்கனவே இரண்டு முறை விவசாய நிலத்திற்கு வந்த நிலையில், பாம்பு பிடிக்கப்பட்டு வைதேகி நீர் வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
ஆனால், தொடர்ந்து விவசாய நிலத்திற்குள் இந்த பாம்பு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், பொதுமக்களால் ராஜநாகத்திற்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதி சிறுவாணி அடர் வனப்பகுதியில் ராஜநாகம் கொண்டு சென்று விடப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க:பாம்புகளிடமிருந்து பரவும் கரோனா வைரஸ்?