ETV Bharat / state

கோவையில் ஒரே நாளில் 130 பேர் வேட்பு மனுத்தாக்கல்!

கோயம்புத்தூர்: சட்டப்பேரவைத் தேர்தலின் வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று (மார்ச் 19), கோவையில் ஒரே நாளில் 130 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலின் வேட்புமனுத் தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று (மார்ச் 19), கோவையில் ஒரே நாளில் 130 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

author img

By

Published : Mar 20, 2021, 9:36 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய முக்கியக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும், ஏற்கனவே வேட்புமனுக்கள் தாக்கல் செய்து விட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நேற்று முன்தினம் (மார்ச் 18) வரை, 187 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று (மார்ச் 19) மேட்டுப்பாளையத்தில் 17 பேர், சூலூரில் 10 பேர், கவுண்டம்பாளையத்தில் 11 பேர், கோவை வடக்கில் 11 பேர், தொண்டாமுத்தூரில் 20 பேர், கோவை தெற்கில் 16 பேர், சிங்காநல்லூரில் 16 பேர், கிணத்துக்கடவில் 13 பேர், பொள்ளாச்சியில் 12 பேர், வால்பாறையில் 4 பேர் என மொத்தம் 130 பேர் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதுவரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 317 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நாளை (மார்ச் 21) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 22 ஆம் தேதி இறுதி நாள் ஆகும்.

இதையும் படிங்க: என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.