ETV Bharat / state

இந்தியா முழுவதும் பயிலும் 1.42 லட்சம் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை - கோவை கணியூர் கேபிஆர் கல்லூரியில் யோகா

கோவை: இந்தியா முழுவதும் பயிலும் 1.42 லட்சம் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 7 நிமிடத்தில் விளையாட்டு பயிற்சி, யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை
பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை
author img

By

Published : Dec 5, 2019, 12:11 PM IST

யோகா, விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் பங்கெடுத்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படும் 365 ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் பள்ளிகளில் இன்று 2019 ஆம் ஆண்டுக்கான உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் விளையாட்டு பயிற்சி, யோகாசனம் செய்தனர். ஏழு நிமிடங்கள் நடந்த இந்த யோகா உலக சாதனையில் 1.42 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை

இந்தியாவில் இந்த சாதனையை இதுவரை 76 ஆயிரம் பேர் பங்கேற்று செய்துள்ளனர். தற்போது ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் அதை முறியடித்துள்ளது.

அந்நிறுவனத்தைச் சேர்ந்த கோவை கணியூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த உலக சாதனைக்கான சான்றிதழ்களை இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் நிர்வாகிகள் பள்ளி முதல்வரிடம் வழங்கினர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் யோகா கின்னஸ் சாதனை முயற்சி!

Intro:இந்தியா முழுவதும் பயிலும் 1.42 லட்சம் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் 7 நிமிடங்களில் விளையாட்டு பயிற்சி மற்றும் யோகா செய்து உலக சாதனை முயற்சி..

Body:யோகா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் பங்கெடுத்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழகம் ஆந்திரா தெலுங்கானா ஹரியானா உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படும் 365 ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் பள்ளிகளை ஒருங்கிணைத்து இன்று 2019 ஆம் ஆண்டுக்கான உலக சாதனையை மேற்கொண்டனர் இதில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் விளையாட்டு பயிற்சி மற்றும் யோகாசனம் செய்தனர் ஏழு நிமிடங்கள் நடந்த இந்த யோகா செய்யும் உலக சாதனையில் 1.42 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் யோகா செய்தனர் இந்தியாவில் இந்த சாதனையை இதுவரை 76 ஆயிரம் பேர் பங்கேற்று செய்துள்ள நிலையில் தற்போது அந்த சாதனையை ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் செய்து முறியடித்துள்ளனர்.இதில் கோவை கணியூர் பகுதியில் உள்ள கே பி ஆர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த உலக சாதனைக்கான சான்றிதழ்களை இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் நிர்வாகிகள் பள்ளி முதல்வரிடம் வழங்கினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.