ETV Bharat / state

ஆப்பிள் தொழில் செய்யலாம் எனக்கூறி ரூ.1.24 கோடி மோசடி: பல் மருத்துவர் கைது - பல் மருத்துவரை கைது செய்த போலீசார்

ஆப்பிள் விற்பனையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி, தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த, சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

ஆப்பிள் மோசடியில் கைது
ஆப்பிள் மோசடியில் கைது
author img

By

Published : Mar 17, 2023, 8:02 PM IST

கோவை: கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ரமேஷ். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்தன் - துர்கா பிரியா தம்பதியர் அறிமுகம் ஆகியுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்களை இறக்குமதி செய்து, அதன் மூலம் தாங்கள் பணம் சம்பாதித்து வருவதாகவும், தாங்களும் இத்தொழிலில் சேரலாம் என்றும் ரமேஷிடம் கூறியுள்ளனர். இந்த நிலையில் தான் பல் மருத்துவர் தம்பதியர், தொழிலதிபர் ரமேஷிடம் ரூ.1.24 கோடியை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், துருக்கியில் இருந்து ஆப்பிள் பழங்களுடன் கன்டெய்னர் வருவதாகவும், அதற்கு ரூ.1.24 கோடியை செலுத்தினால், ரூ.2 கோடி லாபம் பெறலாம் என தொழிலதிபர் ரமேஷிடம், பல் மருத்துவர் அரவிந்தன் - துர்கா தம்பதியர் கூறியுள்ளனர்.

கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரவிந்தனிடம் ரூ.1.24 கோடியை ரமேஷ் கொடுத்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள் கன்டெய்னர் வராமல் இருந்துள்ளது. இதனால் முதலீடு செய்த பணத்தை திருப்பித் தருமாறு ரமேஷ் அரவிந்தனிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல், அரவிந்தன் தம்பதியர் இழுத்தடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலமுறை கேட்டும் அரவிந்தன் - துர்கா பிரியா தம்பதியர் பணத்தை தொழிலதிபர் ரமேஷிடம் கொடுக்கவில்லை.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் ரமேஷ், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சென்னை சென்று, பல் மருத்துவர் அரவிந்தனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரமேஷிடம் இருந்து பெற்ற ரூ.1.24 கோடி மூலம் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது அம்பலமாகியுள்ளது.

சினிமா மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையில், பணத்தை மோசடி செய்ததாக அரவிந்தன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் அரவிந்தனை கோவை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அவரது மனைவி துர்கா பிரியா தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரவிந்தன் தம்பதியர் வேறு நபர்களிடம் இதே போன்ற மோசடி செய்துள்ளார்களா என்பது குறித்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வரும் மார்ச் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

இதையும் படிங்க: கன்னியாகுமரி படகு சவாரி கட்டணம் உயர்வு - அதிருப்தி தெரிவித்த சுற்றுலாப்பயணிகள்

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.