ETV Bharat / state

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு!

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தின் முன்பு எழும்பூர் பகுதியைச் சேர்ந்த போதை ஆசாமி ஒருவர் கையில் பிளேடை கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 6:08 PM IST

சென்னை: எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்(28). இரவு நேரங்களில் கஞ்சா போதையில் தலைமைச் செயலக காலனி குடியிருப்பு காவல் நிலையம் மற்றும் ஓட்டேரி பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிவதை வழக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சரணின் புகாரை வாங்க காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தற்போது வரை காவல்துறை சரணின் புகாரை எடுக்க மறுக்கிறது என்றும், அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித புகாரும் எடுக்கவில்லை என்றுக் கூறி நேற்று(நவ.13) மீண்டும் கஞ்சா போதையில் ஓட்டேரி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவல் அதிகாரிகள், அவரை வீட்டிற்குச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் போதையில் இருந்த அவர், உடனடியாக சென்னை பெருநகர வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தின் வாயிலில் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுக்கிறார்கள் என கோஷமிட்டபடியே அவரது கையில் வைத்திருந்த பிளேடைக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுக்க முயற்சித்துள்ளனர். பின்னர் வேப்பெரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேப்பெரி காவல் துறையினர், அவரை பத்திரமாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வேப்பெரி காவல் துறையினர் சரணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஓட்டேரி மற்றும் தலைமைச் செயலக காலனி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இரவு நேரத்தில் போதையில் உறங்கிக் கொண்டிருந்த போது, போலீஸ் என எழுதப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் போதையில் சரணை பலமாக தாக்கி உள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது புகார் அளிக்க ஓட்டேரி மற்றும் தலைமைச் செயலக காவல் நிலையத்திற்கும் மாறி மாறி சென்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிந்தித்து புகாரை தொடர்ந்து மறுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் கெத்து காட்ட நினைத்த இளைஞர்கள்... கொத்தாக தூக்கிய காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.