ETV Bharat / state

ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை! - ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பல்

ஆன்லைன் செயலி மூலம் மோசடியில் சிக்கிய ஐ.டி. இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை!
ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை!
author img

By

Published : Oct 3, 2022, 7:27 PM IST

சென்னை: கே.கே. நகர் பாரதிதாசன் காலனியைச்சேர்ந்தவர், சீனிவாச ராஜா(53). டெய்லரான இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். நரேந்திரன் பி.காம் படித்துவிட்டு பெருங்குடியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நரேந்திரன் ஆன்லைன் கடன் செயலி மூலமாக ரூ.5 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். ஆப்பில் கடனாக பெற்ற பணமான ரூ.5 ஆயிரத்தை அடைக்க மற்றொரு லோன் ஆப்பில் இருந்து கடன் பெற்று வட்டி கட்டி வந்துள்ளார்.

பின்னர் ரூ.33 ஆயிரம் கடன் செலுத்த வேண்டும் என ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பல் பல முறை போன் செய்ததைக் கண்டு நரேந்திரன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தொடர்ந்து ஆபாசமாகப்பேசி பணத்தை திருப்பிக்கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் நரேந்திரன் அவரது தந்தையிடம் இருந்து 33 ஆயிரம் ரூபாய் பெற்று செலுத்தி உள்ளார்.

பின்னர் மீண்டும் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டுமென லோன் ஆப்பில் இருந்து நரேந்திரனுக்கு போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் நரேந்திரன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக மற்றொரு லோன் ஆப்பிலிருந்து கடனைப்பெற்றுள்ளார்.

இதேபோல கடந்த 15 நாட்களுக்குள் பல லோன் ஆப்பிலிருந்து சுமார் ரூ.80 ஆயிரம் வரை நரேந்திரன் கடன் பெற்றுள்ளார். இதனை கட்டமுடியாததால் திணறிய நிலையில் நரேந்திரனின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அவரது செல்போன் தொடர்பில் இருந்த பெண்களுக்கு அனுப்பி, நரேந்திரனை கடனை செலுத்தச்சொல்லி மிரட்டி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று(அக்.3) காலை நரேந்திரனின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், நரேந்திரன் வீட்டிலேயே தனியாக இருந்துள்ளார். அப்போது நரேந்திரனின் தாய்க்கு மோசடி நபர்கள் போன் செய்து, தங்களது மகனை கடனைச்செலுத்த சொல்லி மிரட்டி உள்ளதாகத்தெரிகிறது. இதனால் தாய் இது குறித்து நரேந்திரனை தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்து அவரது உறவினரை வீட்டிற்குச்சென்று பார்க்க கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்குச்சென்று பார்த்தபோது நரேந்திரன் கதவினைத் தாழிட்டுக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் கைது; கொந்தளித்த தமிழிசை - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.