ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை - குற்றச் செய்திகள்

சென்னை: முன்விரோதம் காரணமாக இளைஞரை ரவிடிகள் வெட்டிக்கொலை செய்தனர். இது குறித்து காவல் துறையினர் 4 பேரிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை இளைஞன் கொலை
முன்விரோதம் காரணமாக ரவுடிகள் வெறிசெயல்: இளைஞரை வெட்டி படுகொலை
author img

By

Published : Apr 8, 2021, 11:26 AM IST

சென்னை நெற்குன்றம், பட்டேல் ரோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரம்மதேவன். இவரது மகன் நாராயணன் (23), பாலிடெக்னிக் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். நேற்று (ஏப்.7) இரவு நாராயணன், அவரது வீட்டு அருகேயுள்ள சாலையோர கடையில் சாப்பிட்டு, பின் வீட்டிற்கு நடந்துவந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று நாராயணனை வழிமறித்து சரமாரியாக தலை, கை, கால் பகுதியில் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனைக் கண்ட அவரது தந்தை, வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வருவதற்குள், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். வெட்டு காயமடைந்த நாராயணனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நாராயணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடியும், சரித்திர பதிவேடு குற்றவாளியான தனஞ்செயன் என்பவருடன், நாராயணனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தனஞ்செயன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாராயணனை கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து காவல் துரையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: 4 வீரர்கள் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.