ETV Bharat / state

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் அடித்துக் கொலை.. உண்மையை மறைக்க சிசிடிவி காட்சிகளை அழித்தது அம்பலம்.. 3 பேர் கைது! நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 3:39 PM IST

Youth Murder at Drug Rehab Center : சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மறைக்க சிசிடிவி காட்சிகளை அழித்தது அம்பலமான நிலையில், மையத்தின் உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youth Murder at Drug Rehab Center
போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை

சென்னை: ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் 27 வயதான விஜய். இவர் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படும் நிலையில், சகோதரர் ராஜேஷ் சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் உள்ள கிரீன் லைப் பவுண்டேஷன் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சேர்த்த்துள்ளார்.

அதன் பிறகு சகோதர் ராஜேஷ் அவரை சந்திக்க மையத்திற்கு சென்ற போது ஊழியர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் நவம்பர் 25ஆம் தேதி விஜய்க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், ஆகையால் ஊழியர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், செல்லும் வழியில் விஜய் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மறுவாழ்வு மையத்தின் சார்பில் சகோதரர் ராஜேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ராஜேஷ் அங்கு வந்து விசாரித்த போது, மறுவாழ்வு மையத்தினர் மிரட்டியதாகவும், பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு சென்று பார்த்த போது விஜயின் கை மற்றும் கால்களில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் தனது தம்பி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வளசரவாக்கம் காவல் நிலையயத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து போலீசார் அந்த மறுவாழ்வு மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மறுவாழ்வு மையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அதுகுறித்து மையத்தின் உரிமையாளர் வினோத் குமார், கணக்காளர் குரூஸ், நோயாளிகளை கவனிப்பவர் ராஜ்கிரண் ஆகியோரை வளசரவாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், விஜய்க்கு நவம்பர் 24ஆம் தேதியே உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், டாக்டர் ஒருவரை வரவழைத்து விஜயின் உடல்நிலையை பரிசோதித்ததில் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு சென்றதாகவும் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 25ஆம் தேதி விஜய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

அப்போது மையத்தின் கணக்காளர் குரூஸ் விஜய்யை தாக்கியதால், மூச்சுத்திணறல் அதிகமாக ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மறுவாழ்வு மையத்தில் உரிய சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியது தான் விஜய் இறந்து போனதுக்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் போலீசிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக சிசிடிவி பதிவுகளையும் அழித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் கைது செய்த மூன்று நபர் மீதும், காயம் ஏற்படுத்துதல், கொலைக் குற்றம், ஆகாத மரணத்தை விளைவித்தல், குற்றவாளியை காப்பாற்றுவதற்காக ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் மறுவாழ்வு மையத்தின் கணக்காளர் குரூஸ், உரிமையாளர் வினோத் குமார், அவரது நண்பர் அஜய் ஆகியோரிடம் அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞரை சக நண்பர்கள் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக புகார்.. உ.பியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.