சென்னை: செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் அழைத்துச் சென்று உயிரிழந்த தினேஷின் மனைவி கௌசல்யா அளித்துள்ள பேட்டியில், கணவர் திருடினால் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் அதைவிட்டு போலீசார் துன்புறுத்தி தாக்குவது என்ன நியாயம் என கூறினார்.
அதனையடுத்து தினேஷின் உடலில் போலீசார் எவ்வித காயமில்லை என பொய்யாக கூறுவதாகவும், பின்னர் வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் மிகவும் சோர்வாக இருந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சாப்பிட்டு உறங்கிய தினேஷ்குமாருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுய நினைவின்றி கீழே விழுந்துள்ளார்.
உடனே தினேஷ் குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தினேஷ்குமார் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
எனது கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் கூறியதாவது, மப்டியில் இருந்த உதவி ஆய்வாளர் உட்பட போலீசார் பைப்பில் அடித்ததாக எனது கணவர் தன்னிடம் தெரிவித்தார். உடைந்த கால் எனக்கூறியும், அந்த காலிலே அடித்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:செல்போன் திருடிய நபர் உயிரிழப்பு - காவல்துறை மீது புகார்!