சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவைச் சேர்ந்தவர் விஜய சாரதி (27). இவர் இரவு 7 மணி அளவில் தனது வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றின் மேல் அமர்ந்துகொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக 35 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளே விழுந்த விஜயசாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு வாயிலாக கிணற்றுக்குள் இறங்கி, விஜய சாரதியை உயிருடன் மீட்டு மேலே கொண்டுவந்தனர்.
பின்னர் விஜய சாரதி உடம்பு, காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க... பூனையை காப்பாற்ற முயன்று 30அடி கிணற்றில் விழுந்த முதியவர்