ETV Bharat / state

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மாணவர் தற்கொலை...? - money loss

சென்னை மயிலாப்பூரில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மாணவர் தற்கொலை

author img

By

Published : Nov 10, 2022, 11:52 AM IST

சென்னை: மயிலாப்பூர் ராக்கியப்பன் தெருவில் உள்ள வீட்டில் தங்கி தர்மபுரியை சேர்ந்த மாணவர் சரண் (22), சி.ஏ படித்து வந்தார். தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற சரண் நேற்று சென்னைக்கு திரும்பிய நிலையில், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராயபேட்டை மருத்துவமனைக்கு வைத்தனர்.

கோல்டு காயின்ஸ் என்ற ஆன்லைன் விளையாட்டில் சரண் பணத்தை இழந்து கடன் தொல்லையால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மயிலாப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.