ETV Bharat / state

நண்பனின் மனைவியிடம் முறையற்ற உறவு.. சென்னையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு! - நண்பனின் மனைவிடம் திருமணத்தை மீறிய உறவு

சென்னையில் நண்பனின் மனைவிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நண்பனின் மனைவிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருக்கு அரிவாள் வெட்டு.
நண்பனின் மனைவிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருக்கு அரிவாள் வெட்டு
author img

By

Published : Jun 9, 2023, 10:11 AM IST

சென்னை: பல்லவன் சாலை, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வயது 23). இவரின் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள பாய்ஸ் கிளப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து பவுல்ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த பவுல்ராஜை அருகில் இருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பவுல்ராஜின் சகோதரி கனிமொழி அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உள்ளனர்.

விசாரணையின் போது, அதேப் பகுதியை சேர்ந்த 26 வயது நபர் பவுல்ராஜை வெட்டியது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பவுல்ராஜ் மற்றும் அவரை வெட்டிய நபர் நெருங்கிய நண்பர்கள் என்பதும், பவுல்ராஜை வெட்டிய நபருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்று இரண்டு பிள்ளைகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பவுல்ராஜ் அடிக்கடி புகாருக்கு ஆளாகியுள்ள நபரின் வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: விடுதி அறையில் இளம்பெண் சடலம்.. காவலாளி செய்த கொடூர சம்பவம்.. மும்பையில் நடந்தது என்ன?

நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. கடந்த ஒரு வருடமாக திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரிய வரவே பவுல்ராஜ் மற்றும் அவரது நண்பர் இடையே இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த நபர் நேற்று அரிவாளை எடுத்து வந்து பவுல்ராஜை சரமாரியாக வெட்டி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், நண்பனை வெட்டிய நபரை கைது செய்தனர். ஏற்கனவே அவர் மீது மீது அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Mumbai Murder: லிவ் இன் பார்ட்னரை கூறுபோட்டு குக்கரில் வேக வைத்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.