சென்னை: ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில் நேற்றிரவு சுமார் 1.30 மணியளவில் தனது 16 வயது மகள் காணமால் போனதாகவும், அருகேயுள்ள அனைத்து இடங்களிலும் மகளைத் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் காயங்களுடன் தன் மகள் கீழே விழுந்து கிடந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மேலும், நவீன் குமார் போன் செய்து தனது மகளை வீட்டைவிட்டு வெளியவரச்செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பிளேடால் கையை கிழித்துவிட்டுச் சென்றதாகவும், நவீன் குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று காலை நவீன்குமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில், கஞ்சா போதையில் சிறுமியிடம் அவர் அத்துமீறியது தெரியவந்ததுள்ளது. தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது