சென்னை: வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், ராயலா நகர்ப் பகுதியில் நகைக்கடையில் கேசியராக பணிபுரிந்து வருபவர், பரத்குமார்(21). அதே பகுதியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கடையை நோட்டமிட்டு முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு நகைக்கடைக்குள் புகுந்து, திடீரென அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, கடையில் இருக்கும் பணத்தை எடுத்து தருமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை கேசியர் பரத்குமார் என்ன செய்வது என்பது தெரியாமல் கடையில் இருந்த கட்டையால் அந்த இளைஞரை தாக்கி மடக்கிப் பிடித்தார். இதை கண்டதும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து கத்தியை காட்டி மிரட்டிய நபரை மடக்கிப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பின்னர், தகவல் அறிந்து ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சிலம்பரசன்(32) என்பதும், இவர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.
இவருக்கு மாதம் வீட்டுச்செலவு மற்றும் சீட்டுப்பணம் கட்டுவதற்கு ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டதால் கையில் பணம் இல்லாததால் நகைக்கடையில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து சிலம்பரசனை கைது செய்து, அவர் கொண்டு வந்த மொபட்டையும் பறிமுதல் செய்து
விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திருடச் சென்ற வீட்டில் பெண்ணிடம் சில்மிஷம்; திருடன் கைது