ETV Bharat / state

மசாஜ் சென்டர் பெண் ஊழியரிடம் நகை பறித்த இளைஞர் கைது

author img

By

Published : Oct 12, 2022, 5:40 PM IST

Updated : Oct 12, 2022, 6:10 PM IST

மசாஜ் சென்டரில் "ஹேப்பி எண்டிங்" செய்ய மறுத்த பெண் ஊழியரை கட்டிப்போட்டு நகையை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மசாஜ் சென்டர் பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபர் கைது

சென்னை மதுரவாயலை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டரில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த மசாஜ் சென்டருக்கு கடந்த 5ஆம் தேதி வந்த இளைஞர் ஒருவர் 1,000 ரூபாய் கொடுத்து மசாஜ் செய்ய கூறியுள்ளார். அந்த இளம்பெண்ணும் மசாஜ் செய்து முடித்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் மீண்டும் "ஹேப்பி எண்டிங்" செய்ய அந்த பெண் ஊழியரை வற்புறுத்தி உள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் பெண் ஊழியரை கீழே தள்ளிவிட்டு கை, கால்களை கட்டிப்போட்டு கால் சவரன் நகையை பறித்துவிட்டு அந்த நபர் தப்பியோடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மசாஜ் சென்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் முக அடையாளங்களை வைத்து பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட அனகாப்புத்தூரை சேர்ந்த அஜித் என்கிற சுரேஷ்(25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டைல்ஸ் போடும் தொழில் செய்து வரும் அஜித், 5 முறைக்கு மேல் இந்த மசாஜ் சென்டருக்கு வந்து 1,000 ரூபாய் கொடுத்து மசாஜ் செய்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் மசாஜ் செய்யும் போது உல்லாசமாக இருக்கலாம் என்று மசாஜ் சென்டர் தரப்பில் கூறி பணம் பெற்று வந்ததாகவும், இதனை நம்பி பல முறை ஏமாந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் மசாஜில் ஈடுபட்ட பின்பு உல்லாசத்திற்கு பெண் ஊழியரை அழைத்த போது வராததால் ஆத்திரமடைந்து கட்டிப்போட்டு நகைகளை பறித்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பறித்த நகைகளை அடகுகடையில் வைத்த போது கம்மலை தவிற மற்றவை எல்லாமே கவரிங் என்பதால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்’ - அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்

Last Updated : Oct 12, 2022, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.