ETV Bharat / state

சென்னையில் பைக்குகள், விலையுயர்ந்த நாய் ஆகியவற்றைத்திருடிய நபர் கைது! - விலையுயர்ந்த நாய் திருட்டு

சென்னை விருகம்பாக்கம் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டதோடு, விலை உயர்ந்த நாயையும் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 6, 2022, 5:10 PM IST

சென்னை: விருகம்பாக்கம் கண்ணையன் தெருவைச்சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக உள்ளார். இவர் வழக்கம்போல், நேற்று (நவ.6) இரவு பணி முடித்து வீட்டின் அருகே நிறுத்திச் சென்ற வாகனத்தை திரும்ப வந்து பார்த்தபோது, வாகனம் காணமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப்திவு செய்து விசாரணை மேற்கோண்டனர். இதேபோல, விருகம்பாக்கம் சுடலைமுத்து தெருவைச்சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் தனது இருசக்கர வாகனத்தைக்காணவில்லை எனப்புகார் அளித்துள்ளார்.

விருகம்பாக்கம் போலீசார் விசாரணை
விருகம்பாக்கம் போலீசார் விசாரணை

இந்நிலையில் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சாலிகிராமம் பகுதியைச்சேர்ந்த சுஜித்(21) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரனையில் விருகம்பாக்கம் அம்பேத்கர் தெருவைச்சேர்ந்த தில்லைக்கரசி என்பவரின் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிவந்த நாயை திருடியதும் இதே சுஜித் தான் என்பதும் தெரியவந்தது. மேலும், போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அந்த விலையுயர்ந்த நாய் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் பைக்குகள், விலையுயர்ந்த நாய் ஆகியவற்றைத்திருடிய நபர் கைது!

இதையும் படிங்க: நாய்களின் தொல்லை அதிகரிப்பு - ராஜஸ்தானில் கடிபட்ட 6 குழந்தைகளில் இருவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.