சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி முதல் காணவில்லை எனவும், கொருக்குப்பேட்டை ஐ.ஓ.சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தி சென்றுவிட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த திருவொற்றியூர் காவல்துறையினருக்கு, மாயமான சிறுமி கொருக்குப்பேட்டை பகுதியில் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சிறுமியையும், அவருடன் இருந்த இளைஞரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிடிபட்ட இளைஞர் கொருக்குப்பேட்டை ஐ.ஓ.சி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பதும், அவர் எம்.சி. சாலையிலுள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சிறுமியைக் காதலிப்பாதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:டீக்கடையில் கும்பலாக திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி