ETV Bharat / state

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக இளைஞர் கைது! - நுகர்பொருள் வாணிப கழகம்

சென்னை: கோபாலபுரத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலக வாயிலில் இருந்த அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

youth-arrested-for-damaging-ambedkar-statue
youth-arrested-for-damaging-ambeyouth-arrested-for-damaging-ambedkar-statuedkar-statue
author img

By

Published : Oct 24, 2020, 11:05 PM IST

சென்னை கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வாயிலில் தங்க முலாம் பூசப்பட்ட அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (அக்.23) இரவு மதுபோதையில் இளைஞர் ஒருவர் அம்பேத்கர் சிலை சேதபடுத்தியுள்ளார். இதில் அம்பேத்கார் சிலை பெயர்ந்து சாய்ந்துள்ளது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள், சிலையை சேதப்படுத்திய இளைஞரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அம்பேத்கர் பணியாளர் சங்க மண்டல செயலர் வினோத்குமார், ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய ஹரிசுரேஷ் (32) மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேலும் சேதமடைந்த அம்பேத்கர் சிலையையும் சரி செய்து அதே இடத்தில் நிறுவினர்.

இதையும் படிங்க: திமுக தொண்டரைத் தாக்கிய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.