ETV Bharat / state

நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை: குற்றவாளிகளைத் தேடும் முயற்சியில் இளம்பெண்!

author img

By

Published : Sep 14, 2020, 12:31 PM IST

சென்னை: முகலிவாக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல் துறையிடம் புகாரளித்தும், அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றவாளிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

young-woman-trying-to-find-the-culprits-sensational-video

சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தனது வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அப்பெண் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அப்பெண் வெளியிட்டுள்ள பதிவில், "அந்த இடத்தில் தான் மட்டும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகவில்லை. பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து, அந்த அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகிறேன்" என்றார்.

அப்படி அந்த நபர்களைப் பிடித்தாலும், அடுத்து என்ன செய்வதெனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாகவும், இதனால் பெண்கள் சுதந்திரமாக வெளியே வர அச்சப்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார். இந்த நாட்டில் பெண்ணைவிட பசு மாட்டிற்கு பாதுகாப்பு அதிகமாக கொடுக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்து அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

குற்றவாளிகளைத் தேடும் முயற்சியில் இளம்பெண்

இளம்பெண் சமூக வலைதளத்தில் இப்பதிவை வெளியிட்டதையடுத்து, காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மொட்டை மாடியில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.