சென்னை: பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் (25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சினேகா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில், பிரமோத் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சேலையூர் ரங்கனாதன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன் சினேகா வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று (ஆக. 2) இரவு பிரமோத் தொலைபேசி மூலம் சினேகாவை தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த சினேகா தனது அறைக்கு சென்று கதவை பூட்டியுள்ளார். வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, சினேகா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, சினேகாவின் தந்தை வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொணடதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது உயிரிழந்த பெண்ணின் கணவர் பிரமோத்தை கைது செய்த காவல் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை