சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து ஏமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று (ஏப்.21) வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த வேலண்டினா மேரி (27) என்ற பெண் தன்னிடம் சுங்கவரி செலுத்தவேண்டிய பொருள்கள் எதுவுமில்லை எனக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்ர். ஆனால், சுங்கத் துறை அலுவலர்களுக்கு இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.
சோதனையில், உள்ளாடைக்குள் தங்க பேஸ்ட் பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்து. 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 926 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த 700 கிராம் தங்கம் பறிமுதல்