ETV Bharat / state

அக்காவிடம் தகராறு செய்த மாமா: தட்டிக்கேட்ட மைத்துனர் கொலை! - இளைஞர் கொலை

சென்னை: வால்பாறை அருகே அக்காவிடம் தகராறு செய்த மாமாவை தட்டிக்கேட்ட மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தட்டிகேட்ட இளைஞர் கொலை
தட்டிகேட்ட இளைஞர் கொலை
author img

By

Published : Jan 28, 2021, 7:51 PM IST

சென்னை வால்பாறை காமராஜர் நகரில் குடியிருந்து வருபவர் கனகரத்தினம் (45). கட்டட கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுசுயா (35). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அனுசுயாவின் தம்பி பழனி ராஜா (31). இவருக்குத் திருமணம் ஆகாத நிலையில் இவரும் அனுசுயாவின் வீட்டில் தங்கி கூலிவேலை செய்து வந்தார்.

இந்நிலையில், பழனி ராஜா வேலை முடிந்துவிட்டு தனது அக்காவின் வீட்டிற்கு வந்தபோது. தனது அக்காவின் கணவர் கனகரத்தினம் குடிபோதையில் அக்காவிடம் தகராறு செய்து கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். இதையடுத்து, “ஏன் குடித்துவிட்டு அக்காவிடம் தகராறு செய்கிறீர்கள், போய் படுத்து தூங்குங்கள், நாளைக்கு வேலைக்கு போகவேண்டுமல்லவா” எனப் பழனி ராஜா, கனகரத்தினமிடம் கூறியுள்ளார்.

அதற்கு, “நான் அப்படித்தான் சத்தம் போடுவேன், நீ என்ன பண்ணுவ” என்று பழனி ராஜாவிடம் கூறியுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காத அவர் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து, பழனி ராஜாவின் இடது மார்பில் குத்தியுள்ளார்.

இதனைக் கண்ட அனுசுயா கூச்சலிடவே, அக்கம் பக்கத்தில் உடனடியாக வீட்டிற்குள் வந்து காயமடைந்த பழனி ராஜாவை சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல் துறையினர், கனகரத்தினத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி நிர்வாகி கொலை முயற்சி: கூலிப்படை அட்டகாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.