ETV Bharat / state

மாற்றுத்திறனாளி மரணத்தில் திருப்பம்: பணத்திற்காக நண்பனை கொன்ற இளைஞன் உள்பட இருவர் கைது! - பணத்திற்காக நண்பரை கொலை செய்த இளைஞர்

20 லட்ச ரூபாய் பணத்திற்காக பாதுகாப்பிற்காக இருந்த நபரே மாற்றுத்திறானாளி இளைஞர் விக்னேஷை கொலை செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

young man killed his disabled friend for money in chennai and set drama

author img

By

Published : Feb 9, 2021, 6:23 PM IST

சென்னை: விருதுநகர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(32). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அச்சுதன் 3ஆவது தெருவில் வீடு எடுத்து ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். விக்னேஷை கவனித்துக் கொள்வதற்காக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவர் ஊதிய அடிப்படையில் அவருடன் பணிபுரிந்து வந்துள்ளார்.

கரோனா காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்த விக்னேஷ், நேற்று காலை அறையில் இறந்துகிடப்பதாக ஆறுமுகம் உறவினருக்கும், கிண்டி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் விக்னேஷின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்த காவலர்கள், ஆறுமுகத்திடம் தொடர் விசாரணை நடத்தினர். அதில், விக்னேஷ் இதய கோளாறு பிரச்னைக்காக பல மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றார். ஆனால், விக்னேஷின் முகத்தில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், ஆறுமுகத்திடம் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். மாற்றுத்திறனாளியான விக்னேஷிற்கு வங்கி கணக்கில் 20 லட்ச ரூபாய் பணம் இருந்ததை அறிந்து, அந்தப் பணத்தை அபகரிக்க திட்டமிட்டோம். இதற்காக தனது நண்பர் நாராயணசாமியுடன் இணைந்து விக்னேஷிற்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினோம். ஆனால் அதனை விக்னேஷ் கண்டுகொள்ளாததால், சமீபத்தில் இதய கோளாறுக்கு அவர் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து, அவரை கொலை செய்யத் திட்டமிட்டோம்.

நேற்று விக்னேஷ் வீட்டில் உறங்கி கொண்டிருக்கும்போது தலையணையை வைத்து விக்னேஷின் முகத்தில் அடைத்து கொலை செய்தோம். பின்னர், விக்னேஷ் மாரடைப்பால் இறந்தார் என அனைவரையும் நம்ப வைத்தோம் என்று இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, பணத்திற்காக கொலை செய்த ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் நாராயணசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். உடற்கூராய்வின் முடிவிற்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.