சென்னை ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகராஜ் மற்றும் சங்கரி தம்பதியினரின் ஒரே மகன் மதன்குமார் (23). இவர் இன்று காலை தற்கொலையால் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைகான காரணம் என்னவென்று விசாரணை நடத்தியதில், சில தினங்களுக்கு முன் மதன்குமார் ரூ.48 ஆயிரம் பணத்தை தொலைத்த விவகாரத்தில் பெற்றோர் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மதன்குமார் தற்கொலையால் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை மீட்பதில் தாமதம்: கிராம மக்கள் சாலை மறியல்