ETV Bharat / state

16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த இளைஞர் போக்சோவில் கைது - இளைஞர் போக்சோவில் கைது

அம்பத்தூரில் 16 வயது சிறுமியை புகைப்படம் எடுத்து காதலிக்க கோரி வற்புறுத்திய இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

author img

By

Published : Mar 23, 2022, 9:42 AM IST

சென்னை: அம்பத்தூரை அடுத்த புதூர், சித்து ஒரகடத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி சிறுமி வீட்டிலிருந்து கடைக்குச் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து வந்த இளைஞர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல், காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், புதூர் திருத்தணிகை நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (21) என்ற இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: குறைந்த அளவு மது கொடுத்த அண்ணன் - கத்தியால் குத்திய தம்பி.....

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.