ETV Bharat / state

முதியவரைக் கல்லால் அடித்துக் கொன்ற நபர் கைது! - முதியவர் அடித்துக்கொலை ஒருவர் கைது

சென்னை: சாலையோரத்தில் தங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder
author img

By

Published : Apr 14, 2020, 11:51 AM IST

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை வெள்ளாளர் தெருவில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி (60) என்ற முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் நேற்று முன்தினம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதலில் விபத்தில் அடிப்பட்டு இறந்திருக்கக்கூடும் என நினைத்த காவல் துறையினர், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் 33 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முதியவரை ஓட ஓட விரட்டி கல்லால் பலமுறை தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்துள்ளன. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அதே பகுதியில் சுற்றித் திரிந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்துள்ளனர்.

இரண்டு நாட்களாக நீடித்த இந்த விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரபிபுல் இஸ்லாம் என்பவர் தான் இவர் என்றும், வீட்டில் சண்டையிட்டு ரயில் மூலம் சென்னை வந்து பல தொழிற்சாலைகளில் வேலை தேடியும் கிடைக்காத விரக்தியில் சாலையோரத்தில் தங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது, அங்கு ஏற்கனவே தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

முதியவரை அடித்துக் கொன்றவர் கைது

இதில் முதியவரை ஓட ஓட விரட்டி கல்லால் அடித்ததில் படுகாயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது கொலை வழக்காக இதனைப் பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் ரபிபுல் இஸ்லாமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருவாரூரில் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ள 7 பேர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.