சென்னை: காதல் பிரச்னைக் காரணமாக கல்லூரியில் படித்துவரும் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திவ்யா(20). இவர் பிராட்வேயில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர். இவர் ஐயப்பன் என்ற நபரை பல மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் குறித்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிந்துள்ளது. இதனால் கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக திவ்யாவிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐயப்பனுக்கும் திவ்யாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்தாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யா, நேற்று (செப்.27) மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திவ்யாவின் காதலர் ஐயப்பனிடம் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து வாட்ஸ்அப்பில் பரப்பிய சிறுவர்கள் கைது!