ETV Bharat / state

ஐந்தாம் வகுப்பு சிறுமியின் உயிரைப் பறித்த டெங்கு!

சென்னை: திருவொற்றியூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

-dengue-fever
author img

By

Published : Oct 29, 2019, 10:17 AM IST

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள சிவசக்தி நகர் நான்காவது தெருவில் வசிப்பவர் முத்துக்குமார். ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த இவரின் மகள் மகேஸ்வரிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மகேஸ்வரிக்கு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாகக் கூறிவரும் நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி டெங்குவால் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெங்குவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்

Intro:டெங்கு திருவொற்றியூரில் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்புBody:சென்னை திருவெற்றியூர் உள்ள சிவசக்தி நகர் நாலாவது தெருவில் வசிப்பவர் முத்துக்குமார் இவர் ஓட்டுனராக பணிபுரிகிறார் இவரது மகள் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகேஸ்வரி கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சென்று பார்த்தபொழுது டெங்கு காய்ச்சல் அறிகுறி என்று தெரிந்தது பின்பு அரசு ஸ்டான்லி மருத்துவமனை கொண்டு சென்று இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மகேஸ்வரி உயிரிழந்தார். பெற்றோர்கள் அரசு சென்னை மருத்துவமனையில் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள்.Conclusion:டெங்கு திருவொற்றியூரில் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.