சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், “காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிகள் வசமிருந்த 15 தொகுதிகளில் 12இல் பாஜக முன்னிலையில் உள்ளது. இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. கர்நாடகாவில் முன்னணியில் உள்ள சுயேச்சை வேட்பாளரும் பாஜகவில் இருந்தவர்தான்.
இதன்மூலம், அடுத்து மூன்றரை ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைக் கொடுக்க பாஜகவிற்கு முழுப் பெரும்பான்மையை கர்நாடக மக்கள் தந்துள்ளனர். கர்நாடகாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் அனைத்திற்கும் முழுக் காரணம் காங்கிரசும் சித்தராமையாவும்தான். எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று சித்தராமையா அரசியலில் இருந்தே விலக வேண்டும்.
இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையிலான பாஜக வருங்காலங்களில் தென் மாநிலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘மருத்துவ இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் இல்லை’ - அமைச்சர் உறுதி