ETV Bharat / state

ஜெயிலர் படம் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த ரசிகர்! - ஜெயிலர் படம் பார்க்க சென்னை வந்த ஜப்பான் ரசிகர்

ஜெயிலர் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படம் பார்ப்பதற்காக மட்டுமே ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் ஜப்பானிலிருந்து சென்னை வந்துள்ளார்.

ஜெயிலர் படம் பார்க்க சென்னை வந்த ஜப்பான் ரசிகர்

author img

By

Published : Aug 9, 2023, 9:58 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் திரையரங்குகளில் நாளை (ஆக.09) வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றதுமே பல்வேறு கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. பல்வேறு விமர்சணங்கள் முன்வைக்கப்பட்டாலும், ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணி குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை இப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போதே படம் குறித்த கொண்டாடங்களில் ஈடுபட்டுள்ளனர் ரசிகர்ள்.

சமீபத்தில் நடிகர் ரஜினி நடித்த படங்கள், பட வெற்றியைக் கடந்து சுமாரான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இந்த படத்தின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் படவிழாவில் தெரிவித்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் ஜப்பான் ரசிகர் ஒருவர்‌ தனது மனைவியுடன் ஜெயிலர் படம்‌ பார்ப்பதற்காகவே சென்னை வந்துள்ளார். யசுகா என்ற அந்த நபர், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்.

ஜப்பானில் முத்து படத்தை பார்த்ததில் இருந்து ரஜினியின் ரசிகராக மாறிவிட்டதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி படத்தின் ரிலீஸ் அன்று சென்னை வந்து சென்னை ரசிகர்கள் உடன் படத்தை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த முறை ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் என்பதால் சென்னை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த முறை கபாலி ரிலீஸ் அன்று சென்னை வந்தபோது இவர் கொடுத்த பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். முத்து படத்தின் மூலம் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், பின்னர் அவர் நடித்த எல்லா படங்களையும் தேடி தேடிப் பார்த்துள்ளார். மேலும் ரஜினியை பற்றி பல புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாபா படம் முதல், நடிகர் ரஜினியின் படங்களை சென்னையில் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான் இவர், ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி நடித்த காலா, கபாலி, தர்பார் படங்களை சென்னையில் பார்த்துள்ள இவர், இந்தமுறை ஜெயிலர் படம் பார்க்க தனது மனைவி ஷாட்சுகியுடன் சென்னை வந்துள்ளது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி கடந்த 2 ஆம் தேதி தனது மனைவியுடன் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் யசுகா. நடிகர் ரஜினியை சந்தித்த போது ஜெயிலர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், ஜப்பானுக்கு வருவதாக ரஜினி உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் லிங்கா படச் சமயத்தில் ரஜினியை யசுகா சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த இரண்டு சந்திப்புகளும் தன்னால் மறக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். நாளை காலை காசி திரையரங்கிலும் மதியம் ஆல்பர்ட் திரையரங்கிலும் அடுத்தடுத்து ஜெயிலர் படத்தை பார்க்க உள்ளதாக கூறிய அவர், தலைவரை திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Jailer Movie Release: ரஜினி, விஜய் ரசிகர்களின் நோட்டீஸ் யுத்தம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.