ETV Bharat / state

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் - தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் அனைவரும் தோல்வி - நாவோ ஹிபினோ

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்று இன்று (செப் 10) தொடங்கியது. இதில் விளையாடிய அனைத்து இந்திய வீராங்கனைகளும் தோல்வியடைந்தனர்.

Chennai
Chennai
author img

By

Published : Sep 10, 2022, 10:26 PM IST

சென்னை: சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ.250 (WTA 250) சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி, தமிழகத்தில் முதற்முறையாக நடைபெற இருக்கிறது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் மொத்தம் 32 வீராங்கனைகள் களம் இறங்க உள்ளனர். இதில் 26 பேர் ஏற்கனவே ரேங்கிங் அடிப்படையில் தேர்வு செய்யபட்டுள்ளனர். மீதம் உள்ள 6 பேர் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் தகுதி சுற்று போட்டிகள் இன்று(செப்.9) தொடங்கியது. WTA சென்னை ஓபனின் தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்கள், இன்று நடந்த தொடக்கச் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று, நாளை நடைபெறும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

முதலிடத்தில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த யூகி நைட்டோ, 16 வயதான இந்திய வீராங்கனையான லட்சுமி பிரபா அருண்குமாரை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இவர் ஒலிவியா தஜான்ட்ராமுலியாவை நாளை இரண்டாம் சுற்றில் சந்திக்கிறார்.

இரண்டாம் நிலை வீரரான ஜப்பானைச் சேர்ந்த நவோ ஹிபினோ, தமிழ்நாட்டு வீராங்கனை சாய் சம்ஹிதாவை 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இவர், எட்டாம் நிலை வீராங்கனையான டேனிலா விஸ்மனேவை நாளை எதிர்கொள்கிறார். லாட்வியா வீராங்கனை விஸ்மனே, 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சோபியா லான்சேரை வீழ்த்தினார்.

போட்டியில் இருந்த மற்ற இந்தியர்களான ருதுஜா போசலே, ரியா பாட்டியா, சௌஜன்யா பாவிசெட்டி ஆகியோர் தகுதிச் சுற்றின் முதல் சுற்றிலேயே வெளியேறினர். இன்றைய தினத்தில் மிக நீண்ட ஆட்டத்தில், மூன்றாம் நிலை வீராங்கனையான லினா குளுஷ்கோ 4-6, 6-1 7-6 என்ற செட் கணக்கில் மரியா டிமோஃபீவாவை இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களில் தோற்கடித்தார்.

32 வீரர்கள் பங்கேற்கும் பிரதான டிராவில் ஆறு தகுதிச் சுற்றுகளில் ஒன்றைப் பெற, தகுதிச் சுற்றில் விளையாடும் வீராங்கனைகள் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற வேண்டும். மேலும் யுகி நைட்டோ 6-4, 6-1 என்ற கணக்கில் லட்சுமி பிரபா அருண்குமாரை தோற்கடித்தார். அதைத் தொர்ந்து நாவோ ஹிபினோ - ஜப்பான் 6-1, 6-0 என்ற கணக்கில் சாய் சம்ஹிதா சாமர்த்தியை தோற்கடித்தார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் பெண்கள் டென்னிஸ் விளையாடுவது அதிகரிப்பு..தமிழக டென்னிஸ் சங்க தலைவர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.