ETV Bharat / state

வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்க முடியாது! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவற்றைத் திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Worship places close till corona curfew
Worship places close till corona curfew
author img

By

Published : May 18, 2020, 4:20 PM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு, நான்காவது முறையாக மே 17ஆம் வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மே 4ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஜலில் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ”மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையற்ற டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கக் கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக் கூடிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்கவில்லை.

இஸ்லாமியரின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்குச் சென்று வர முடியவில்லை. முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்தந்த இடங்களுக்குச் சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் இருக்கின்றனர். அதனால் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை உரிய பாதுகாப்புடன் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், ”மத வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் கூட்டம் அதிகளவில் வரும். அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்களும் இல்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு, மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.