ETV Bharat / state

வரும் 12ஆம் தேதி எம்.ஜி.ஆர் பல்கலை.யில் தற்கொலையைத் தவிர்ப்பது குறித்து கருத்தரங்கம்: அனுமதி இலவசம்! - தற்கொலை தடுப்பு தினம்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் வருகிற 12ஆம் தேதி உலகத் தற்கொலை தடுப்பு தினம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு

author img

By

Published : Sep 9, 2022, 7:34 PM IST

சென்னை: உலகத் தற்கொலை தடுப்பு தினத்தில் மனிதர்கள் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழகம் நடத்துகிறது. உலகத் தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் ஒவ்வொரு செப்டம்பர் மாதம் 10ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தில் வரும் 12ஆம் தேதி மதியம் 2 மணியளவில் பல்கலைக்கழக வெள்ளி விழா கலையரங்கில் “உலகத் தற்கொலை தடுப்பு தினம்” தொடர்பாக மனிதர்கள் பிரச்னைகளை எதிர்கொள்வதும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பதும் எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது.

இக்கருத்தரங்கில், பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் மற்றும் பிரபல மனநல மருத்துவர் டாக்டர்.டி.வி.அசோகன் ஆகியோர் தற்கொலை எண்ணங்களில் இருந்து தடுத்துக்கொண்டு வாழ வழி வகை செய்யும் பல யுக்திகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள். இதில் கலந்துகொள்ள பொது மக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை சாலைகளில் தொடரும் பைக் சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.