ETV Bharat / state

34 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி...! - government staff

34 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அரசு ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

get job after 34 years  job  high court  court news  chennai news  chennai latest news  Works on the basis of grace  சென்னை செய்திகள்  உயர்நீதிமன்றம்  சென்னை உயர்நீதி மன்றம்  கருணை அடிப்படையில் வேலை  அரசு வேலை  அரசு ஊழியர்  அரசு ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை  government staff  compassionate grounds
high court
author img

By

Published : Sep 28, 2021, 7:57 AM IST

சென்னை: ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ரோசா என்பவர், வருவாய்த் துறையில் பணியாற்றிவந்த தனது கணவர் 1988ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறி, கருணை அடிப்படையில் தனக்கு அரசுப் பணி வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பித்தார்.

அதே நேரத்தில் மற்றொரு பெண், அரசு ஊழியரின் மனைவி எனக் கூறி கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரியதால், சட்டப்பூர்வ மனைவி யார் என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுவர அரசு அறிவுறுத்தியது.

இதன்படி, ரோசா, தன்னைச் சட்டப்பூர்வ மனைவி என அறிவிக்கக்கோரி 2011ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ரோசாவிற்கு ஆதரவாக 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது.

மகனுக்கு வேலை

இதையடுத்து, தன் மகன் பிரபாகரனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பின் விண்ணப்பித்துள்ளதாகக் கூறி, வழக்கைத் தள்ளுபடிசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ரோசா, பிரபாகரன் தாக்கல்செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் அமர்வு, இத்தனை ஆண்டுகள் தாமதத்திற்கு மனுதாரரையோ அல்லது அரசையோ குறை கூற முடியாது என்றும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்றும், அதனால் பிராபகரனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப் பரிசீலிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்தும், பிரபாகரனுக்குத் தகுதிக்கேற்ப அரசுப் பணியை மூன்று மாதத்தில் வழங்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை முன்மாதிரியாகக் கருதக் கூடாது, ஏனெனில் இந்த உத்தரவு இவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் எனும் தகவல் தவறு' - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.