ETV Bharat / state

ஏரோபிளேன் ரிப்பேர் பாக்கலாம் : சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி - சென்னை செய்திகள்

சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக தமிழ்நாடு அரசு வழங்கிய 32,300 சதுர அடி நிலத்தில் புதிதாக எம்.ஆர்.ஓ எனப்படும் விமானங்கள் பழுதுபார்த்தல், பராமரிப்பு மையம் தொடங்கப்படுகிறது.

சென்னையில் விமானங்களை பழுதுப்பார்க்க எம்ஆர்ஓ மையம் தொடக்கம்

author img

By

Published : Jun 14, 2023, 10:27 AM IST

சென்னை: இந்தியா முழுவதும் விமான சேவைகளை விரிவுப்படுத்தி, மேம்படுத்துவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் விமான சேவைகள் அதிக அளவில் இருந்தாலும், விமானங்களில் ஏற்படும் பழுதுகளை சீர் செய்யவும், விமானங்களை பழுதுப் பார்ப்பதற்கும் என மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதை அடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், நாடும் முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 8 சர்வதேச விமான நிலையங்களை தேர்வு செய்தது.

அதில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். சென்னை உள்ளிட்ட 8 சர்வதேச விமான நிலையங்களிலும், விமானங்களை பழுதுப் பார்த்தல், பராமரித்தல், விமானத்தில் பழுதடைந்த உபகரணங்கள் நீக்கிவிட்டு புதிய உபகரணங்கள் பொருத்துதல், விமானங்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தல் போன்றவைகளுக்காக மெயின்டனன்ஸ் ரிப்பேரிங் அண்ட் ஆபரேஷன் எனப்படும் எம்.ஆர்.ஓ (MRO-Maintenance Repair and Operations) மையங்கள் அமைக்கப்படுகின்றன.

அதன்படி சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், ஏப்ரான் எனப்படும் விமானங்கள் நிறுத்தும் இடத்திற்கு, பின் பகுதியில், இந்த எம்.ஆர்.ஓ மையத்தை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. ஆனால் அதற்கான இட வசதி அந்தப் பகுதியில் இல்லை. இதை அடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சென்னை விமான நிலைய இயக்குனர், தமிழ்நாடு அரசிடம் அதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு கிழக்குப் பகுதியில், கவுல் பஜார் பகுதியை ஒட்டி 32,300 சதுர அடி நிலத்தை, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை மூலமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிக்காக, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் முறைப்படி ஒப்படைத்து உள்ளது. இதை அடுத்து தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையத்திற்கு, அளித்துள்ள நிலத்தில், விமானங்கள் பழுதுப்பார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக எம்.ஆர்.ஓ மையத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு நிலம் வழங்கி, ஓராண்டு ஆகிவிட்டாலும், சென்னை ஒருங்கிணைந்த புதிய சர்வதேச முனையம் திறப்புப் பணியில், அதிகாரிகள் தீவிரமாக இருந்ததால், இந்தப் பணி உடனடியாக தொடங்கவில்லை. இந்த நிலையில் தற்போது, இந்திய விமான நிலைய ஆணையம், டெல்லியை தலைமை இடமாக இயங்கிக் கொண்டு இருக்கும், சவுரியா ஏரோநாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து உள்ளது.

அதன்படி அந்த நிறுவனம் சென்னை விமான நிலையத்தில், எம்.ஆர்.ஓ மையத்தை விரைவில் அமைக்க இருக்கின்றனர். அவர்கள் அடுத்த 15 ஆண்டுகள், சென்னை விமான நிலையத்தில் இந்த எம்.ஆர்.ஓ மையத்தை நிர்வகிப்பார்கள். அதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் இனிமேல், பழுதடைந்த விமானங்கள் உடனடியாக சீர் செய்யப்படும். இப்போது வெளிநாட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் பழுதடைந்தால், அந்த விமானங்கள் ஓடுபாதையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான நாடுகளில் இருந்து உதிரி பாகங்கள் கொண்டுவரப்படுகிறது.

அதன் பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கழித்து, அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு செல்கிறது. சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி இந்த சம்பவங்கள் நடப்பதால், வெளிநாடு செல்ல வேண்டிய பயணிகள், சென்னை நகர ஹோட்டல்களில் தங்கி இருந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் இந்த எம்.ஆர்.ஓ மையம் சென்னை விமான நிலையத்தில் செயல்பட தொடங்கிய பின்பு, சில மணி நேரங்களில், விமானங்களில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறைச் சீர் செய்து, விமானத்தை அனுப்பி விடுவார்கள்.

இதனால் பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்கள், சென்னைக்கு புதிதாக விமான சேவைகளை தொடங்க வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த புதிய எம்.ஆர்.ஓ மையம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் நல்ல முறையில் பழுதுபார்க்கப்பட்டு, புதிதாக வர்ணம் பூசப்பட்டு பின் இயக்கப்படும். அதுமட்டுமின்றி சென்னை விமான நிலையத்தில், பழுதடைந்து, இனிமேல் இயக்க முடியாது என்ற நிலையில் கண்டம் செய்யப்பட்ட விமானங்களை, உடைத்து அதில் நல்ல நிலையில் உள்ள உபகரணங்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் உட்பட்ட பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையம் ஆகியவை இணைந்து, டெல்லியில் உள்ள அந்த தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. இந்த எம்.ஆர்.ஓ மையம் செயல்படும் போது, சென்னை விமான நிலையத்தில் மேலும் பலருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை சயனைடு விவகாரத்தில் திருப்பம்.. மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.