ETV Bharat / state

மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை 60 % ஆக உயர்வு

author img

By

Published : Jul 14, 2021, 6:55 AM IST

அரசுப் பேருந்துகளில் பெண் பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, பயணிகளின் எண்ணிக்கை 40 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கும்மிடிபூண்டி
கும்மிடிபூண்டி

சென்னை: கும்மிடிபூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவன பயிற்சி மையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிய பணிமனைக்கு இடம் தேர்வு செய்தல் ஆகியவற்றைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று(ஜூலை.13) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டையஸ், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகையில், " அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் நடைமுறையானது அமலுக்கு வந்தபோது, பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 6,000 லிருந்து 7,291 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் எண்ணிக்கையை அறிந்து கொள்ளவே, கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படுகிறது. இதே போன்று மாற்றுத் திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள், திருநங்கையர்கள் ஆகியோர்களுக்கும் கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படுகிறது.

பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,650 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில், மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழக 2,800 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

minister rajakannapan
சாலை போக்குவரத்து நிறுவன பயிற்சி மையத்தை பார்வையிட்ட அமைச்சர்

பேருந்துகளின் ஆயுட்காலமானது புதிய திட்டத்தின்படி, 9 லட்சம் கி.மீ. இயக்கம் அல்லது 12 வருடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழைய பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2,000 டீசல் பேருந்துகள் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன், மின்சாரப் பேருந்துகள் (e bus) வாங்கிடவும் ஏற்பாடு செய்யப்படும்.

மற்ற மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கிட பரிசீலினை

பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளின் பயண கட்டணம் தற்போது உயர்த்தப்படமாட்டாது.

பாண்டிச்சேரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து 364 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கிடப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் உடன் கலந்து ஆலோசித்து பேருந்துகள் இயக்கப்படும்.

minister rajakannapan
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

பயணிகளுக்குக் குடிநீர் வழங்கும் பிளான்ட்

பயணிகளுக்குக் குடிநீர் வழங்கும் பிளான்ட் கும்மிடிப்பூண்டியில் ஒரு வருட காலமாகச் செயல்படாமல் உள்ளது. மீண்டும் இயக்கி பயணிகளுக்கு 1 லிட்டர் பாட்டில், 1/2 லிட்டர் பாட்டில் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'விரைவில் சசிகலா தலைமையில் அதிமுக இயங்கும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.